Sunday, 9 November 2014

வீடு – சராசரி இந்தியனின் கனவு

வீடு


நாம் அனைவரும், இந்த இந்தியத் திருநாட்டில் தினம் தினம் வாழ்கை நடத்தவே நிறைய போரட்டங்களோடுதான் வாழ்கிறோம். நாம் அனைவரும் நிறைய கொடுமைகளை அனுபவித்துத்தான் ஒரு நிலையில் இருந்துதான் இன்னொரு நிலைக்கு போகவேண்டியிருக்கிறது.

அதில் ஒரு சாதாரண நடுத்தர இந்தியனின் தன் வாழ்நாள் கனவே தனக்கென்று ஒரு வீடு கட்டி அதில் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில்தான் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குத்தான் எந்த நல்லதும் நடந்துவிடதே.

முருகன், என்னுடன் மூன்று வருடம் ஒன்றாக  கல்லூரியில் எபோதும் என் இடப்பக்கத்தில் அமருபவன். இருவரும் ஒரே ஊர்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு முருகனின் அப்பா, தாங்கள் இருந்த பழைய ஓட்டு வீட்டை இடித்து மாடி வீட்டை கட்ட முடிவு செய்து பணியில் இறங்கினார். அங்கே கடன், இங்கே கடன், வங்கியில் கடன் என்று அத்துணை கடன் வாங்கித்தான் வீடு ஓவ்வொரு அடியும் உயர்ந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு முறை முருகனை சந்திக்கும்போது வீடு முழுவதும் கட்டி முடிந்துவிட்டது. இனிமேல் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று கூறினான்.

இப்போது நண்பன் ஒருவன் திருமணத்திற்குப் சென்றிருந்தபோது கேட்டேன், இப்போது எவ்வளவு கடன் கழிதீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆம் “வீட்டையே விற்று விட்டோம் எங்களால் கடனை அடைக்க வேறு வழியே இல்லை, நாங்கள் கட்டிய சொந்த வீட்டை விற்று, அங்கேயே வாடகைக்கு இருக்கிறோம்” கடவுளே எனக்கு அப்போது பேச வார்த்தைகள் வரவே இல்லை.

அப்போது நான் இந்த கொடுமை உலகில் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றேன். அதற்கு அவனோ என்ன செய்வது எங்களுக்கு எங்களுக்கு இந்த கொடுமை நடந்தே விட்டது என்றான். மனதை தளரவிடாதீர்கள். நிலைமை வெகு விரைவிலேயே மாறிவிடும் என்று கூறினேன். சரி போகட்டும் எல்லா கடனையும் அடைத்துவிட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் இல்லை இன்னும் மூன்று லட்சம் கடன் இருக்கிறது என்றான். எனக்கு இன்னும் வருத்தமாக இருந்தது.

முருகனின் அப்பா எங்கள் ஊர் தக்காளி மண்டியில் உரக்கடை வைத்துள்ளார். ஆனால் கடையில் ஏனோ வியாபாரம் அந்த அளவுக்கு இல்லை. முருகன் ஓசூரில் ஒரு நிறுவனத்தில் 8500 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை செய்கிறான். அம்மா வீட்டை பார்த்துக்கொள்கிறார். இவர்கள் வாங்கிய மொத்த கடன் 35 லட்சம் மேல், கடனை அடைக்க சாத்தியமே இல்லை. யாருடைய கெட்ட நேரமோ இவர்களுடைய வருமானத்திற்கு மிகவும் கூடுதலாகவே கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் யாரோ ஒரு பெங்களூரு காரரிடம் விற்றுவிட்டார்கள். இப்போது இவர்கள் கட்டிய சொந்த வீட்டை விற்று அந்த வீட்டிலேயே வாடகைக்கு  இருக்கவேண்டிய கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். என் அம்மா மற்றும் என் அண்ணனிடம் சொன்னேன் பாவம் அவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திரும்பத் திரும்ப கேட்டார்கள் “உண்மையாவா சொல்ற” என்று.


அடுத்து நாங்களும் வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறோம்!!!... 

Saturday, 1 November 2014

இந்திய வங்கிகளின் அய்யோக்கியத்தனம்

நவம்பர் 1 முதல் அதாவது இன்றுமுதல் ATM அட்டையை மாதத்திற்கு ஐந்து முறைதான் பயன்படுத்த முடியம் மற்றும் வேறு வங்கி ATM களை மூன்று முறைதான் பயன்படுத்த முடியும்.



இதனால் லாபம் வங்கிகளுக்குத்தான் எப்போதும்போலவே நம் வாயில் மண்தான்!. காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் நன்றாகவே புரியும். சமிபகாலமாக கடனட்டைகள் (DebitCards) மக்களிடையே பயன்படுத்துவது குறைந்துள்ளது இதனால் வட்டி மூலமாக வந்துகொண்டிருந்த வருவாய் இப்போது அந்த அளவிற்கு வருவதில்லையே. எவன் மண்டையில் உதித்த வழி என்றுத் தெரியவில்லை, அறை எடுத்து யோசித்து வைத்தார்கள் மக்களுக்கு மிகப்பெரிய ATM வேட்டு!.

ஆம், ATM பயன்படுத்துவதை குறைத்தால் நிச்சயமாக கடனட்டைகள் பயன்பாடு உயரும். எப்படி என்ற சந்தேகமா?, இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரு மாதத்திற்கு சராசரியாக குறைந்தது 30 முறை பயன்படுத்துவதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இப்போது  மொத்தம் எட்டுமுறை என்றால் ஆரம்பத்தில் நாம் சிக்கனமாகப் பார்த்து பணம் எடுப்போம், ஆனால் எத்தனை நாளைக்கு?.


வெகுவிரைவில் நாம் எல்லா பணத்தையும் எடுத்து செலவுசெய்ய ஆரம்பித்துவிடுவோம். அதன்பின் என்ன நிலைமை? பழைய நிலைமைதான்!. கடனட்டைகள் பயன்பாடு அதிகமாகும், அதனால் நாம் வங்கிகளுக்கு நாம் வட்டியுடன் சேர்த்துக்கட்டவேண்டும். இதனால் வங்கிகளின் வருமானம்தான் உயருமே! பிறகென்ன நம்முடைய கோமணம் காற்றில் பறக்கும்!. உலகிலேயே இந்தியர்கள்தான் கடனட்டைகளை குறைவாக பயன்படுத்துகிறார்கள். இப்பொது தெரிகிறதா ஏன் இந்த நடவடிக்கை என்று?

Monday, 13 October 2014

நீங்கலாம் என்ன அவ்ளோபெரிய அப்பாடக்கரா...

நீங்கலாம் என்ன அவ்ளோபெரிய அப்பாடக்கரா...

     நீண்ட காலமாகவே ஒரு விசயத்தைப் பற்றி எழுத வேண்டும் இருந்தேன் இதை என் முதல் பதிவாகவே ஆரம்பிக்கிறேன். நான் கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் இணையும் ஒரு மலை கிராமத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் வளர்ந்து, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டத்தில் படித்து, இப்பொழுது வேலை மித்தமாக பெங்களுருவில் வாழ்கிறேன். ஒரு நாடோடி என்றும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.

     இரஜினிகாந்த், இவரை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை தமிழ் பேச, எழுதத் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர். இவரைப்பற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கிறது, இவன் ஒரு கன்னடன், இவன் ஒரு மராத்தியன், கூத்தாடி, தைரியம் இல்லாதவன், ஒரு வியாபாரி, தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அல்லது ஏமாற்றி சொத்து சேர்த்துக்கொண்டான், தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சான், இந்த வயதிலும் நடிக்கிறான் சேர்த்த சொத்துப் போதாதா, பேத்தி வயது நடிகைகள் உடன் நடிக்கிறானே, ஒன்னு அரசியலுக்கு வரேன் வரலன்னு சொல்லவே மாட்டான் இன்னும் இருக்கலாம் எனக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது.

“ இவன் கன்னடன், மராத்தியன் ”

     அட... அட... அழகியத்தமிழ் மகன்ளே, உங்க பூர்விகம்லாம் உங்களுக்குத் தெரியுமா? இத சொல்றதுக்கு உங்களுக்கு யோக்கியதை இருக்கா? இத ஒரு சுத்தத் தமிழன் கேட்டா ஒரு நியாயம் இருக்கு? தமிழன் போர்வைல கேள்வி கேட்குற பயந்தான்கொளிகள், தொடைநடுங்கிகிகளே... உங்கள் சுயத்தை வெளிக்காட்டத் தயாரா? தமிழுக்காக என்ன செய்து கிழித்தீர்கள், உங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கவைத்துவிட்டு தமிளு... தமிலு... என்று நடிக்கும் பசோந்திகளே தெரிந்துகொள்ளுங்கள் பிறப்பால் மராத்தியனாக இருந்தாலும், வளர்ப்பால் கன்னடனாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம்தான் அவருக்கு பூர்விகம், ஆதலால் அவரும் தமிழரே.

“ அவன் வியாபாரி, என்னசெய்தான் தமிழ்நாட்டிற்கு ”

     சரி நீங்கள் உங்கள் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்று உழைத்து பணம் சம்பாரிக்குரீர்கள், ஏன் அந்த பணத்தை நீங்களே வைத்திருக்கவேண்டும் பிழைப்புக்காக சென்ற ஊருக்கு கொடுத்துவிட்டு கோமணத்துடன் வாங்களேன் பார்க்கலாம், முடியாதல்லவா...? உண்மையில் செய்யவேண்டியதை என்றோ தமிழ்நாட்டிற்குச் செய்துவிட்டார், அதை சொல்லிக்காட்டுவது என் வேளை அன்று. இரஜினிகாந்த் படத்தைப் பார்க்க தமிழை கற்றவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள், நீங்கள் தமிழுக்காக என்ன கத்தை கட்டுநீர்கள்? அத்தனையும் அயோக்கியத்தனம்தான் நீங்கள் செய்ததது.

“ சொத்து சேர்த்தது போதாதா “
   
  சொத்து சேர்த்தார் சொத்து சேர்த்தார் என்று கூறும் மூடர்களே, முட்டாள்களே, அவர் என்ன உங்கள் பையில் இருந்த பணத்தை பிடுங்கிக்கொண்டரா? உங்கள் நிலத்தை அபகரிதரா? உழல் செய்தாரா?. நீங்கள் நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியை ஒரு முறையேனும் உண்மையான வருமானத்திற்கு செலுத்தியிருப்பீர்களா? அட வருமான வரியை நீங்கள் கட்டியதுண்டா? ஊரை ஏமாற்றி வாழும் உங்களுக்கு இரஜினிகாந்த் பற்றி பேச யோக்கியதை இல்லை.

“ பேத்தி வயது நடிகைகள் உடன் நடிக்குறான் “

     அட சோனமுத்தா... அடேய் சோனமுத்தா... நான் நடிக்கும் படங்களை எல்லோரும் பார்த்தே ஆகவேண்டும் என்று சொன்னாரா? இல்லை உன் பேத்தியைதான் என்னுடன் நடிக்க அனுப்பு என்று உன் வாசலில் வந்து நின்றாரா? திரைப்படத்தை பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கத் தெரியாத உங்களை என்வென்று சொல்லித்தொலைவது. உனக்கு பிடிக்கவில்லையா பார்க்காதே, உங்களுடைய எல்லாத்தையும் மூடிக்கொண்டு உங்கள் வேலையை பாருங்கள்.

“ அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? “

     அவர் வந்தால் உனக்கென்ன வரவில்லை என்றால் உனக்கென்ன? முதலில் ஓட்டு போடும் பழக்கம் இருகிறதா உங்களிடம்? காலையில் முதலாக சென்று ஓட்டு போட்டு தன் சமுதாயக் கடமையாற்றும் அவரைப்பற்றி பேச உங்களுக்கு யோக்கியதை இல்லை. முதலில் உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள் அதற்குப்பிறகு அந்த மனிதரைப்பற்றி (இரஜினிகாந்த்) பேசலாம்.